நான் உன்னை தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதும் இல்லை.பல மலர் கொண்டு உன் திருவடிகளை நான் பணிவதும்இல்லை.ஒரு தவமும் செய்தவன் இல்லை.உன்னை நினைத்து உருகும் அடியவர் இருப்பிடம் நான் அறியவில்லை.உன் மலையை வலம் வருவதும் இல்லை. மகிழ்ச்சியாக உன் புகழ் துதிக்க விரும்புவதும் இல்லை.எருமை வாகனமுடைய எமன் தூதர்களுடன் கதாயுதம் பாசக் கயிறு கொண்டு வரும் போது அஞ்சேல் என மயிலின் முதுகின் மீது வர வேண்டும்.போர்க்களத்தில இறந்து கிடக்கு உடல்ளின் மாமிசத்தை உண்ணவம் விரித்த தலையயர் கொண்ட அசுரர்களோடு போரிடும் வேலனே. குயிலின் ஓசை போன்ற குரலுடைய வள்ளியின்குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனம கஸ்தூரி அணிந்து மலை போன்ற தோள்களை உடையவன.தினந்தோறும் பிரம்ம விதிப்படி நீரால் அபிஷேகம் செய்து பூக்களை அர்ச்சித்து முனிவர்கள் தொழ மகிழ்பவனே.தெனதெனநதென என்ற சப்த்துடன் வன்டுகள் தேனை குடிக்கும் சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றம் சரவண மூர்த்தியே.
No comments:
Post a Comment