முருக பெருமானின் அம்சமான உக்கிர பாண்டியன் மதுரையை ஆண்ட போது வறுமை ஏற்பட்டது அதனால் அவர் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் மேரு மலையை செண்டால் அடித்தால் பொன் மலையாக மா றும் என்று வரம் கொடுத்தார்.இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. யானைமகனுக்கு இளையவனாக பிறந்த முருகனே.ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்கினறவரும் பாற்கடலை தாமே கடைந்தவரும் கரிய நிறமுடைய திருமாலின் மருமகனே.நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ எனககு முன் தோன்றி திருவருள் புரிய வேண்டும். திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானின் குமாரனே.பறை வாத்தியங்கள் முழங்க போர்க்களத்தில் சூரனை வென்றவனே.சந்திரனும் சூரியனும் தடவி செல்லும் உயரமான மரங்கள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள.
No comments:
Post a Comment